கீதம் இன்னிசை குழுவில் ஆடி அசத்திய மாநகராட்சி மண்டல தலைவர்கள்

கோவை,

 கோவையில் பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோவை கீதம் இசைக்குழு சார்பில் நடைபெற்ற இன்னிசை குழுவில் மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மற்றும் பணிக்குழு தலைவர் சாந்தி முருகன் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடி அசத்தினர்.

 கோவை பீளமேட்டில் உள்ள விஜய் எலன்சா ஓட்டலில் நேற்று  கீதம் இன்னிசை குழு துவங்கப்பட்டது. இந்த துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி ,பணிக்குழு தலைவர் சாந்தி முருகன், வார்டு உறுப்பினர்கள் மூபுஜீரா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி இன்னிசை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை, திருப்பூர் ,கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் உள்ள ஆண் பெண் பாடகர்கள் கலந்து கொண்டு 70-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரான மத்திய மண்டல தலைவர் மீனலோகு மற்றும் பணிக்குழு தலைவர் சாந்தி முருகன் ஆகியோர் குழுவில் இணைந்து பல பாடல்களை பாடி அசித்தனர் .மேலும் காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த இன்னிசை நிகழ்ச்சியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள் டி எம் சௌந்தரராஜன் பாடிய பாடல்களை பாடினர் இந்த கீதம் இசைக் குழு மூலம் வரும் நாட்களில் திருவிழாக்கள் பொது நிகழ்ச்சிகள் கல்லூரிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கீதம் இசைக்குழு மூலம் பல இன்னிசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இசை குழு நிர்வாகி நா. லோகு தெரிவித்தார்். விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான ஆண் பெண் பாடகர்கள் , மற்றும் கோவை மாநகராட்சி  வரிவிதிப்பு குழு தலைவர் முபஸ்தரா, பத்ருதீன், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Attachments area