கோவை மாநகர பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் உத்தமராமசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்தார். இதை அடுத்து அவர் நேற்று பீள மேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .இதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று இரவு எட்டு முப்பத்தி ஏழு மணிக்கு விகேகே மேனன் சாலையில் உள்ள கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் .இதே போல ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி துணிக்கடை முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது .ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.