பாஜக கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி திடீர் கைது :திமுக எம்.பி.

ஆ. ராசாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு

கோவை,

நீலகிரி தொகுதி திமுக எம் பி., ஆ. ராசா கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துக்கள் குறித்து அவதூறான வகையில் பேசி இருந்தார். இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கடந்த சில நாட்களாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று இந்து முன்னணி சார்பில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது .மேலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்ற வருகிறது. நேற்று முன்தினம் துடியலூர் பகுதியில் இந்து  அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆ. ராசா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில்  நடைபெற்ற போராட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி பேசும்போது  எம்பி இராசாவை ஒருமையில் பேசினார். மேலும் கோவை மாவட்டத்திற்கு இந்த தேதியில் வருகிறேன் என கூறிவிட்டு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்து பார் என்றார். திமுகவினர் மற்றும் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் வந்து பார் நீ எங்க கால் எடுத்து வைக்கிறாய் என நான் பார்க்கிறேன்?  என்று பொறுமையில் சவால் விடும் விதமாக பேசி இருந்தார்.சனாதனத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு எவன் வந்தாலும் பிய்ந்த  செருப்பால் அடிப்பேன் . மேலும் பெரியார் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி இருந்தது. இதை அடுத்து கோவை பீளமேடு போலீசார் 

இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை எடுத்து இன்று காலை 6 மணி அளவில் அவரது வீட்டிற்கு பாஜக தலைவர் உத்தம ராமசாமியை விசாரணைக்கு என்று கூறி பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றிய தகவல் பாஜக தொண்டர்களிடையே வேகமாக பரவியது. இதை எடுத்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். பின்னர் பீளமேடு போலீசார் உத்தம ராமசாமி இடம் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர் இந்த தகவல் வெளியே தெரிந்ததும் பாஜக தொண்டர்கள் போலீசுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார் தொடர்ந்து பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே அவிநாசி சாலைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது போலீசார் சாலை மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தி பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர் இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பின்னர் கைது செய்த 

பாலாஜி உத்தம ராமசாமியை   பீளமேடு போலீசார்  மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்த ஏராளமான பாஜகவினர் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர் . திமுக எம்பி ராசா குறித்து மிரட்டும் விதமாக பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது.