கோவை,
கோவை துடியலூர் அருகே உள்ள மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் திருச்சியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா(52) மற்றும் மகள் அர்ச்சனா(18) ஆகியோர் மீனாட்சி கார்டன் பகுதியில் இருந்து வந்தனர். திருச்சியில் இருந்து அடிக்கடி வந்து செல்வார்.இவருடைய மகள் அர்ச்சனா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை கல்லூரி செல்ல பாத்ரூம் சென்று உள்ளார்.அப்போது வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டு தண்ணீரில் பாய்ந்து கீழே விழுந்த சத்தம் கேட்டு அவரது தாயார் கார்த்திகா காப்பாற்ற சென்ற போது இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.இது தொடர்பாக கல்லூரி மாணவியை அழைத்து செல்ல காலை கார் வந்த போது மாணவி வராதாதால் அருகில் இருந்தவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது வீட்டின் பாத் ரூமில் தாய் மகள் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து திருச்சியில் உள்ள அவரது கணவர் ஆனந்தன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.துடியலூர் போலிஸாருக்கு கிடைத்த தகவல் பேரில் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி தாய் மகள் இறந்த சம்பவம் கேட்டு அப்பகுதி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.