கோவை,
முன்னாள் முதல்-அமைச்சரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். பின்னர் சேலம் செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 9.10 மணியளவில் கோவை விமானநிலையம் வந்து இறங்கினார்.அவருடன் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வந்தார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் இரவு உணவு சாப்பிட்டார். தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியை அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. கட்சியினர் திரளானோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர்,
தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலை இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினோம். தி.மு.க.வில் இருந்து ஒவ்வொருவராக விலகுவது திராவிட மாடல் அரசின் சாதனை.
இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக ஆ.ராசா கீழ்தரமான, விதமாக பேசுவது கண்டிக்கதக்கது என்று தெரிவித்த அவர்,ஆ.ராசா குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா ? அல்லது அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கும் பொருந்துமா என்று கேட்டேன்..இன்னும் அவரது கட்சி தலைவர் உரிய பதிலளிக்கவிக்லை என்று தெரிவித்தார்.
விடியா தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வில்லை. தமிழகத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை. எளிதாக பரவும் காய்ச்சல் என டாக்டர்கள் சொல்கின்றனர். இந்த அரசு விழிப்போடு இருந்து குழந்தைகளை காப்பதுடன், மருத்துவகுழு ஆராய்ந்து இந்த காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும் அதிமுக உட்கட்சி விவாகரம் குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும்,
நீதிமன்ற தீர்ப்பு வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீரகள்..
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை பற்றி பேசினால் அது வழக்கிற்க்கு தடையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஏ.கே.செல்வராஜ். வி.பி.கந்தசாமி. அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.