ஆறு வயது குழந்தையுடன் தாய் மாயம்

திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் என்பவரின் மனைவி நாகலட்சுமி ,(31) இவர்களுக்கு ஆறு வயதில் மகள் ஒருவர் உள்ளார். நாகராஜ் கிரில் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். நாகராஜுக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது இதன் காரணமாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து நாகலட்சுமி தனது 6 வயது மகளை அழைத்துக் கொண்டு நாகராஜின் சகோதரர் வீட்டிற்கு கோவை செல்வபுரத்திற்கு வந்தார். இந்நிலையில் நேற்று நாகலட்சுமி தனது மகளை அழைத்துக் கொண்டு திருப்பூருக்கு செல்வதாக கூறிவிட்டு காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் திருப்பூருக்கு தனது கணவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடி பார்ததும் கிடைக்கவில்லை தொடர்ந்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது .புகாரில் நாகலட்சுமி செல்போனில் வேறு யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதும் தெரியவந்தது. எனவே அந்த நபருடன் நாகலட்சுமி சென்றிருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகலட்சுமியையும் அவரது மகளையும் தேடி வருகின்றனர்.