கோவை சுந்தராபுரம் அடுத்த மதுக்கரை மார்க்கெட் ரோடு கஸ்தூரி நகர் பகுதியில் சேர்ந்தவர் வெங்கடாசலம் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார் (59 ).இவர் கோவை பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ். எஸ். ஐ .யாக பணிபுரிந்து வருகிறார் .இவரது மனைவி சுந்தராபுரம் அடுத்த மாச்சம் பாளையம் பகுதியில் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஸ்டேஷனரி கட்டடத்தின் உரிமையாளரான சீனிவாசன் என்பவரின் சகோதரி பாபாத்தி என்பவரின் மகன்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் பாப்பாத்தியின் மகன் செந்தில்குமார்( 28 )என்பவர் சீனிவாசன் வீட்டிற்கு வந்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து சீனிவாசனின் மனைவி சத்திய பிரியா கிருஷ்ணகுமாரின் மனைவியிடம் வந்து உடனடியாக கிருஷ்ணகுமாரை வீட்டிற்கு வர சொல்லுங்கள் என கூறியிருக்கிறார். இந்த தகவல் கிடைத்த கிருஷ்ணகுமார் வேகமாக வீட்டிற்கு வந்தார். அப்போது பாப்பாத்தி மூத்த மகன் செந்தில்குமார் காயங்களுடன் வீட்டில் கீழே கிடந்தார். அருகில் அவரது இளைய மகன் முத்துக்குமார் கையில் கத்தியுடன் நின்று கொண்டு இருந்தார். கிருஷ்ணகுமார் என்ன இது என்று விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது குடும்பத் தகராறு காரணமாக சண்டை நடைபெற்றதாக அவர்கள் கூறினர். அப்போது திடீரென ஆத்திரமடைந்த முத்துக்குமார் கையில் வைத்திருந்த கத்தியால் தனது அண்ணன் செந்தில்குமார் கழுத்து மற்றும் மார்பில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கீழே விழுந்தார் .உடனே அங்கிருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற முத்துக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக அண்ணனை போலீஸ்காரர் கண்ணெதிரே தம்பி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
%d bloggers like this: