உலர் பழங்கள் வாங்கி 22 லட்ச ரூபாய் மோசடி

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா (44 ). இவர் செல்வபுரம் பகுதியில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சார்பில் பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழங்கள் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. அதே செல்வபுரம் பகுதியில் பெஸ்ட் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் குமாரசுந்தரம் என்பவரின் மகன் சாமி முருகன் (43) .இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்சர் பாஷாவிடம் இருந்து 22 லட்சத்து 82 ஆயிரத்து 695 ரூபாய்க்கு உலர் பழ வகைகளை வாங்கியுள்ளார் .மேலும் பணத்தை மூன்று தவணைகளாக தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் சாமி முருகன் வாங்கிய பொருள்களுக்குரிய பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து அன்சர் பாஷா பலமுறை சாமி முருகனிடம் கேட்கும் போதும் சரியான முறையில் பதில் அளிக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். பணத்தை கேட்ட அன்சர் பாஷாவை ரவுடிகளை அனுப்பி சாமி முருகன் மிரட்டி உள்ளார். இதை தொடர்ந்து அன்சர் பாஷா செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சாமி முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *