பல்வேறு மகத்துவங்களை கொண்ட தென்னீராவை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் தென்னீரா விழிப்புணர்வு நடைபயணம் இன்று காலை நடைபெற்றது. பேரணியை ரூட்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை இயக்குனர் கவிதாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக
உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன்,
துணை நிர்வாக இயக்குனர் ஸ்கை சுந்தரராஜ்
ஆகியோர் தென்னீராவின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். பேரணியானது ரேஸ் கோர்ஸ் தாஜ் ஹோட்டல் அருகே ஆரம்பித்து மாவட்ட கலெக்டர் வீடு வழியாக சென்று மீண்டும் தாஜ் ஹோட்டலை அடைந்தது. பேரணியின் போது தென்னீரா நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பாதைகளை கையில் ஏந்தி வந்தனர்.
%d bloggers like this: