மாடு முட்டி கீழே விழுந்து ஒருவர் சாவு

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (56).இவர் பன்னிமடையில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வருகின்றார். கடந்த 24ஆம் தேதி வேலைக்கு சென்ற இவர் மாலை 5 மணியளவில் கம்பெனி கேட்டின் முன்பு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது வெளியே இருக்கும் சாலை வழியாக மாடு ஒன்று உள்ளே வரவிடாமல் இருப்பதற்காக,அதை விரட்ட சென்ற போது மாடு அவரின் வயிற்றில் முட்டி கீழே தள்ளியது. கீழே விழுந்த அவர் ரத்த காயங்கள் எதுவும் ஏற்படாததால் தனியார் மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று வீட்டிற்க்கு சென்றுள்ளார். பின்பு நேற்று காலை வயிறு வலி ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். சிகிச்சையில் இருந்த நபர் இரவு 11 மணி அளவில் வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.இது குறித்து தடாகம் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.