கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் சேவை பெறும் உரிமை சட்டத்தை மீட்டெடுக்க தெருமுனை பிரச்சார கூட்டம் காந்திபார்க் பகுதியில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமையில் மண்டல செயலாளர் ரங்கநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கலந்து கொண்ட அவர் பேசுகையில் மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் நீதி மையம் முதலில் குரல் கொடுப்பதாகவும்,அந்த வகையில் தற்போது,சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் கூறியுள்ளதை சுட்டி காட்டிய அவர்,தற்போதைய தி.மு.க.அரசு தேர்தல் வாக்குறுதியிலேயே கூறியுள்ளதாகவும்,எனவே,அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைப்பதற்கு,சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்றார். இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்கள் நீதி மையம் எடுத்து செல்ல உள்ளதாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர்,தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் உதவி திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாகவும், செயல் முறை படுத்தல் இல்லை என குற்றம் சாட்டினார்.
இதில் மாநில செயலாளர்கள் மயில்சாமி,மூகாம்பிகை ரத்தினம் அனுஷ்யா ரவி,ராகேஷ் மாநில துனை செயலாளர் சண்முகராஜன், மண்டல செயலாளர்கள் செல்வா,சித்திக்,ரம்யா வேணுகோபால், ஸ்ரீதர், அருணா மாவட்ட செயலாளர்கள் தம்புராஜ், பிரபு, சிட்கோ சிவா,மனோரம்யன் மற்றும் மய்ய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
%d bloggers like this: