
தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு சார்பில் தேசிய தலைவர் ஜாகிர் உசேன், பொதுச் செயலாளர் முத்துலிங்கம், மாநில சட்ட ஆலோசகர் தர்மராஜன் உள்ளிட்டோர் கோவை மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான கட்டிடங்களின் சுவர்களிலும், காம்பவுண்டு சுவர்களிலும், அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள், ஜாதி அமைப்புகள், மத அமைப்புகள் தங்களது வால் போஸ்டர்களை ஒட்டியும் கட்சி தலைவர்களின் பெயர்களை எழுதிய விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால் பொது சொத்துகளுக்கு கேடு விளைவிக்கப்படுகிறது. மேலும் மேற்படி விளம்பரங்களால் பொதுமக்கள் கவனம் சிதறுவதோடு அரசின் சொத்துக்களை சட்ட விரோதமாக சேதம் ஏற்படுத்துவதும் பொது அமைதிக்கு பங்கம் நடை பெறுகிறது. எனவே அரசு கட்டிடங்களில் இதுபோல விளம்பரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
