கோவையில் திடீர் மழை
மின்கம்பத்தில் ஜேசிபி வாகனம் மோதியதால் நகரில் மின்தடை

கோவை நகரில் இன்று மதியம் திடீரென பலத்த மழை பெய்தது. அந்த சமயத்தில் கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையம் அருகே ஜேசிபி வாகனம் மின் கம்பத்தில் மோதி மின்கம்பம் முறிந்தது.இதனால் கோவை நகரில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்தடையை சரி செய்யும் விதமாக பணிகளை செய்து வருகின்றனர்.