
கோவை கணபதி பகுதியில் ஜீவஜோதி ரத்ததான அறக்கட்டளை துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் சுரேஷ், அன்னை பூமி அறக்கட்டளை சிவப்பிரகாஷ், திருமலை அண்ட் கோ ரமேஷ், பி எம் எஸ் மாநில பொறுப்பாளர் முருகேசன், ராஜ் கேட்டரிங் ஹரிஹரன், அகன்யா கேட்டரிங் தியாகராஜன், அபியா கேட்டரிங் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறக்கட்டளை உறுப்பினர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. இந்த அறக்கட்டளை குறித்து நிர்வாகிகள் கூறும் போது வசதி இல்லாத முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது ,ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வது, தொழிலாளர்களுக்கு நலவாரிய பலன்களை பெற்றுத் தருவது என பல்வேறு பணிகளை அறக்கட்டளை சார்பில் செய்ய இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கர் ,நரேஷ் குமார், ராஜசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
