திமுகவில் இணைகிறார் முன்னாள் அதிமுக எம்.எல் .ஏ. ஆறுக்குட்டி

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள்  எம்எல்ஏ   வி.சி ஆறுக்குட்டி இன்று பொள்ளாச்சியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு .க .ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டு முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றவர் ஆறு குட்டி. அதிமுக தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வந்தார் .ஆனால் அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி வாய்ப்பு மறுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் தொகுதிகள் பி ஆர் ஜி அருண்குமார் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்தது .அதன் பிறகு முன்னாள் எம்எல்ஏ ஆறுக் குட்டி அதிமுக கட்சி நிகழ்ச்சிகள் செயல்பாடுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். மேலும் இரட்டை தலைமை விவகாரத்தில் அடிக்கடி கருத்து கூறி வந்தார் .மேலும் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் பொள்ளாச்சி ஆச்சி பட்டியில் நடைபெற உள்ளது. அங்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணை இருக்கிறார். ஏற்கனவே முன்னாள் அதிமுக எம்பி  நாகராஜனும் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது . இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி செய்துள்ளார்.இது குறித்து முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி கூறும்போது மக்கள் பணியாற்ற சரியான வாய்ப்பு இல்லாததால் தற்போது திமுகவில் இணைந்து  மக்கள் பணியாற்ற போவதாக கூறினார்.