5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : வாலிபருக்கு வலை

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : வாலிபருக்கு வலை

கட்டிட வேலை செய்யும் தாயுடன் தங்கி இருந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை அடுத்த கோவை புதூர் பகுதியில் பேவரி ஹில்ஸ் வளாகத்தில் 200 க்கும் மேலான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கட்டிடத் தொழிலாளர்கள் ஆண் பெண் தங்கி இருந்து கட்டிடம் வேலை செய்து வருகிறார்கள் இதில் கட்டிட பெண் தொழிலாளி தன்னுடைய 5 வயது பெண் குழந்தையுடன் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தார் அப்பொழுது 27 வயதுடைய சக கட்டிட தொழிலாளி திருப்பத்தூரை சேர்ந்த சசிகுமார் அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியின் தாய் இல்லாத போது 5 வயது சிறுமியை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் இதனால் நடந்த சம்பவத்தை தாயிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி இது குறித்து விசாரித்து கட்டிட தொழிலாளி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு இடையே அந்த தொழிலாளி தப்பி ஓடிவிட்டார் .போலீசார் அவரை தேடி வருகிறார்கள்்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *