
கோவை,
கோவையின் சிறந்த மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விருதை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
அகில இந்திய அளவில் தலைசிறந்த மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் சிகிச்சை தரம் ,நவீன வசதிகள் ஆகியவற்றை கொண்டு ஆண்டு தோறும் தரவரிசை பட்டியல் வெளியிடுவார்கள். அதன்படி இந்த ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கோவை அளவில் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது. மேலும் டாக்டர் முத்து சரவணகுமார் தமிழகத்தின் சிறந்த மூட்டு சிகிச்சை நிபுணராக தேர்வு பெற்றுள்ளார் .
கோவையில் கடந்த 12 ஆண்டுகளாக விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 1000 க்கும் மேற்பட்டோர் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரால் காப்பாற்றபட்டுள்ளனர்.மேலும் 8000 திற்கும் மேற்பட்ட மூட்டு மாற்று மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவையில் தலை சிறந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சேவையில் சிறந்த பணி செய்தவர்களுக்கு டைம்ஸ் நிறுவனம் விருது வழங்கி கௌரவித்தது.
இந்த ஆண்டிற்கான டைம்ஸ் நிறுவனம் சார்பில் கோவையில் பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற 50 பேருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். கோவையில் சிறந்த மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விருதை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த விருது குறித்து டாக்டர் முத்து சரவணகுமார் கூறும் போது, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த முறையில் அவசர சிகிச்சை அளித்து வருகிறோம். அதேபோல மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தனி இடம் பெற்றுள்ளோம். இதனை அங்கீகரிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த விருது எங்களையும் எங்கள் மருத்துவ குழுவினரையும் இன்னும் ஊக்கப்படுத்தும் என்றார்.